voters-list-24102015வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயரை சேர்க்கவும், பெயரை நீக்கவோ அல்லது வேறு ஏதேனும் திருத்தங்கள் செய்யவோ கடந்த இரண்டு வாரங்களாக காலக்கெடு கொடுத்த நிலையில் தற்போது இதற்கு இன்று கடைசி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்கள் இன்று தங்களுக்கு அருகில் உள்ள உள்ளாட்சி அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் (அதாவது 1998 ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, திருத்தங்களுக்கு படிவம் 8, ஒரே சட்டமன்ற தொகுதியில் முகவரி மாற்றத்துக்கு 8-ஏ, திருத்தங்கள் மேற்கொண்டு புதிய வாக்காளர் அட்டை பெற படிவம் 001 ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி , அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த சிறப்பு முகாமில் தமிழகம் முழுவதிலும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளாட்சி அலுவலகங்களில் மட்டுமல்லாமல், www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும், EASY என்ற கைபேசி செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம்.
English summary-voters list name inclusion last date today