வெட்டிங் ஐகான்ஸ் விருதுகள் 2015 எனப்படும் திருமணத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை கவுரவிக்கும் இவ்விழா, திமியூசிக் அகாடமியில் விமரிசையாக நடத்தப்பட்டது. தனித்தன்மை வாய்ந்த திருமணங்களை நடத்துவதில் தங்களது சேவை மற்றும் புதுமையான முறைகளை வழங்கிவரும் சிறந்த நிறுவனங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன. ஆடை வடிமைப்பாளர் (ஆண் மற்றும் பெண்), சமையல், திருமணக்கூடம், புகைப்படம்& காணொளி, அலங்காரம், அழைப்பிதழ்கள், நகைகள், திருமண ஏற்பாடு, சிறந்த மறுபரிசு மற்றும் சிறப்பு விருதுகள் என 11 வகையானவிருதுகள் இதில் அடங்கும்.

“திருமணத்தை நடத்துவதில் ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களை தரம்பிரித்து காட்டுவதும், அத்துறையில்சிறந்த செயல்பாடுகளுக்கு ஒரு அளவுகோளை நிர்ணயிப்பதும் இவ்விருதுகளின் முக்கிய நோக்கமாகும். இதனால் திருமணமொன்றை நடத்தவிரும்பும்எக்குடும்பதிற்கும் இதுவொரு வழிகாட்டியாக அமையும்.” என திரு.பிரதியும்னா டி. வெங்கட், நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, மேரேஜ் கலர்ஸ்.காம் (marriagecolurs.com) தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்,” மேரேஜ் கலர்ஸ் நிறுவனம் உலகம் முழுதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு திருமணம் நடத்துவது சம்பந்தமான தகவல்கள்மற்றும்கைதேர்ந்த ஆலோசனையைவழங்கிவருகின்றது. Marriagecolours.com-ல் உள்ள ஆன்லைன் வர்த்தக மையதத்தின் மூலம் வாடிக்கையாளர்கள்திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சுலபமாக வாங்கமுடியும். இந்த முயற்சி திருமணத்துறையில் தரம், தொழில் நேர்த்தி மற்றும் புதுமை ஆகியவற்றை கொணரும் வகையில் எங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது”

“இன்றைய காலகட்டத்தில், தாங்கள் விரும்பிய பலனை அடைய அனைவரும் நிபுணத்துவம் மற்றும் ஆழமான அனுபவம் வாய்ந்த சிறப்புமிக்க வல்லுநர்களையே தெர்வு செய்கின்றனர். திருமணங்களை நடத்த வேண்டும் என விரும்பும் பல குடும்பங்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆலோசனையைக் கேட்கின்றனர், இது சிறந்ததாக அமையலாம் அமையாமலும் போகலாம். எனவே இந்த முயற்சி அவர்களுக்குத் தகுந்த தகவல்கள், சரியான ஆலோசனை கூறுவதோடல்லாது பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தவும் பெருமளவில் உதவும்.” என்றும் அவர் கூறினார்.

விருதுகள் பெற்றவர்கள்:

சிறந்த திருமண மண்டபம் கன்ஃப்லூயன்ஸ் பான்குவட்ஸ்அண்ட்ரிசார்ட்ஸ், மாமல்லபுரம்
சிறந்தபணத்துக்கேற்ற திருமண மண்டபம் ஸ்ரீ விஷ்ணு மகால் கல்யாண மண்டபம், சாலிகிராமம்
சிறந்ததிருமண பாங்குவெட் ஹில்டன், சென்னை
சிறந்த சொகுசு திருமண பாங்குவெட் ஐ.டி.சி. கிரான்ட்சோழா, கிண்டி
சிறந்த திறந்தவெளி திருமணத் திடல் ஹோட்டல் கிரீன் பார்க், வடபழனி
சிறந்த பீச் வெட்டிங் டெஸ்டிநேஷன் ராடிசன் ப்ளூ ரிசார்ட், மாமல்லபுரம்
சிறந்த திருமண சம்யல்காரர்கள் ஏ எஸ் ராஜசேகர் கேட்டரர்ஸ்
சிறந்த திருமண புகைப்படம் மற்றும் காணொளி ஸ்டுடியோஏ
சிறந்த மணமகனுக்கான ஆடைஅணிகலன் வடிவமைப்பு கப்பானாலைஃப்
சிறந்த மணமகளுக்கான ஆடையகம் போத்தீஸ்
சிறந்த திருமண நகைகளை செய்வோர் வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்
சிறந்த திருமண அழைப்பிதழ்கள் ஷுப் கார்ட்ஸ்
சிறந்த திருமண ஏற்பாட்டாளர் இவன்ட் ஆர்ட்
சிறந்ததிருமண மண்டப அலங்காரம் விவாஹிகா
சிறந்த ரிடர்ன் கிஃப்ட் சன்ஸ்க்ரிட்டி
சிறந்த திருமண புகைப்பப்டக்காரர் ராக்கேஷ் பிரகாஷ் ஃபோட்டோகிராஃபி
சென்னை வெட்டிங் ஐகான் அறுசுவை அரசு நடராஜன்
வெட்டிங் இன்னோவேஷன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
திருமண வடிவமைப்பு மற்றும் கருத்தாக்கம் சும்யோக்
அழகு மற்றும் அலங்காரம் டோனி& கை

விருதுகளைப்பெற்ற இவ்வனைவரும், ஒவ்வொரு துறையிலும் நெடும் சந்தை ஆய்வு மற்றும்பொதுமக்களின் வாக்குகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.மேலும்,ரெஹானே – ஃபேஷன் டிசைனர், செஃப்தாமு, சின்மயிஸ்ரீபாதா – பின்னணிபாடகி, கார்த்திக்ஸ்ரீனிவாசன் – பிரபலங்களுக்கானபுகைப்படக்காரர், பிரவின் சேகர் – சந்தை ஆய்வாளர் மற்றும் நவாப்சாதா முகமதுஆஸிஃப்அலிஆகியோர்உள்ளடங்கிய 8 பேர் கொண்ட நடுவர்கள் குழு, தங்களின் புரிதல் மற்றும் அனுபவத்தின் மூலம் விருதுக்கான நிறுவனங்களை தேர்வு செய்தது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்துசென்னையில் மெரேஜ் கலர்ஸ் நிறுவனத்தின் சார்பில்“தி வெட்டிங் டிசைன் சம்மிட் 2015”,“ராயல்வெட்டிங் எக்ஸ்போ 2015” மற்றும்“இந்தியா வெட்டிங் ஃபாஷன்”, ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவுள்ளன. இவை திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உங்களுக்கு வழிகாட்டவும் திட்டமிடவும் உதவும் வகையில் அமையும் நிகழ்ச்சிகளாகும்.

மேலும் தகவல்களை அறிய தொடர்புகொள்ளவும்: திரு. பிரதீப் சந்தர், மேரேஜ் கலர்ஸ்,9840715075 அல்லது www.marriagecolours.com.