ஆதார் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் சில மாறுதல்களை கொண்டுவந்துள்ளது.

ஆதார் வழக்கில் தீர்ப்பை வாசித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ” கடந்த காலங்களில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட ஒன்று ஆதார். தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்சனையாக உள்ளது. ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்கள் போன்றதல்ல. ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பது நல்லதே. உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் தனிநபரின் கண்ணியம் காக்கப்படும் ” என்று தெரிவித்தது.

மேலும், ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது. குறைந்த, அத்தியாவசிய தகவல்கள் மட்டுமே ஆதாருக்காகப் பெறப்படுகிறது. ஆதாருக்காக சட்ட விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். அதேசமயம் ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் மறுக்கக் கூடாது. அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியள்ளது.

இதைத் தொடர்ந்து ஆதார் தொடர்பான உத்தரவில் என்ன மாறுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்:

1) எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் உங்கள் ஆதார் விவரங்களை கேட்கக்கூடாது

2) தனியார் நிறுவனங்களுக்கு தகவல்களை தர அனுமதி தரும் ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

3) மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஆதார் எண் தர வேண்டிய அவசியமில்லை

4) வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டியதில்லை.

5) வங்கிகளுக்கு இனிமேல் ஆதார் எண் வழங்க வேண்டிய அவசியம் இல்லை

6) பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண்ணை கேடக்கக் கூடாது

7) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்

8) பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்

9) அரசு மானியம், உதவி பெற உங்களுக்கு தகுதி இருந்தால் ஆதார் எண்ணை காட்டி அதனை தடுக்க முடியாது

10) தனிநபரின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *