தமிழகத்தில் வரும் மே 16ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறது. இந்த முறை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதியில் பதட்டமான வாக்குசாவடிகளை கண்டறியும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இதன்படி 418 வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்தவை என மாவட்ட தேர்தல் அலுவலகம் கண்டுபிடித்துள்ளது. அதில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில்தான் அதிகமான வாக்குசாவடிகள் பதட்டமானவை ஆகும். இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் 72 வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக அறியப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வேளச்சேரி தொகுதி மிகவும் குறைவாக பதட்டம் மிகுந்ததாக உள்ளது. இங்கு 5 வாக்கு சாவடிகள் மட்டுமே பதட்டமானவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதட்டம் மிகுந்த, வாக்குசாவடிகள் விவரம் தொகுதி வாரியாக வருமாறு:

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – 28, பெரம்பூர் – 30, கொளத்தூர் – 11, வில்லிவாக்கம் -14, திரு.வி.க. நகர் -14, எழும்பூர் – 28, ராயபுரம்- 40, துறைமுகம்- 17, ஆயிரம்விளக்கு – 35, அண்ணாநகர் – 24, விருகம்பாக்கம் – 28, சைதாப்பேட்டை – 22, தி.நகர் – 39, மைலாப்பூர் – 11.

பதட்டமான வாக்கு சாவடிகள் பற்றிய விவரம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

English Summary: Which places are Chennai’s Tense polling booths??