கோவையை சேர்ந்த ஃபெதர் கிரியேஷன்ஸ் (Feather Creations) மற்றும் சிடிஎன் (CTN) என்ற ஊடகமும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை நேற்று சென்னையில் வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள சிடிஎன் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சு பொறுக்குதில்லை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஜான் தன்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் வழக்கறிஞர் பகுத்தறிவு, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜலட்சுமி, பேராசிரியை சுந்தரி மற்றும் சிடிஎன் பொறுப்பாளர் சிவலிங்கம் உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் 6 குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது. சிறந்த குறும்படமாக விங்ஸ் (Wings) என்ற குறும்படம் தேர்வு செய்யப்பட்டு அந்த படத்தின் குழுவினர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் சென்னையில் ஆட்டோ ஓட்டி தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வரும் ஆறு பெண்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் ஃபெதர் கிரியேஷன்ஸ் சார்பில் அதன் உறுப்பினர்கள் ஜோசப் மற்றும் ஷாம் நன்றி கூறினர்.