கடந்த 16-ஆம் தேதி அன்று ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் சிலையை தரிசனம் செய்துள்ளனர்.

காஞ்சியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் உள்ள அத்திவரதர் சிலையை கடந்த 15 நாட்களாக பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில் 16-ஆம் தேதி அன்று 80,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இளஞ்சிவப்பு பட்டாடையுடனும், பல்வேறு மலர்களை கொண்ட அலங்காரத்திலும் அத்திவரதர் காட்சி தர, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் எந்த ஒரு தடையுமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *