விருதுநகர்-சாத்தூர், திருப்பரங்குன்றம்-கள்ளிக்குடி, ராமநாதபுரம்-உச்சிப்புளி வழியே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:

விருதுநகர்-சாத்தூர், திருப்பரங்குன்றம்-கள்ளிக்குடி ராமநாதபுரம்-உச்சிப்புளி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் (எண்.56769/56770) ஆகஸ்ட் 15 முதல் 31 ஆம் தேதி வரை திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விருதுநகர் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படாது. இதே ரயில் ஆகஸ்ட் 15 முதல் 31 ஆம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மதுரை-திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஆக.15-30 ஆம் தேதி வரை ரயில் பெட்டிகள் பராமரிப்புக்காக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 145 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.30 மணிக்கு புறப்படும்.

திருநெல்வேலி-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (எண். 16191/16192) ஆக.15 ஆம் தேதி மட்டும் விருதுநகர்-திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்-கோவை ரயில் (எண் 56319/56320) ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று மானாமதுரை வழியாக சுற்றுப்பாதையில் இயக்கப்படும். திருச்சி- ராமேஸ்வரம் ரயில்(56829/56830) ஆக.24 முதல் 31 ஆம் தேதி வரை 35 நிமிடங்கள் தாமதமாக ராமநாதபுரம் வந்தடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *