Tamil Nadu tet book Corporation que10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானதை அடுத்து இன்று முதல் அதாவது ஜூன் 23 முதல் 11ஆம் வகுப்புகள் தொடங்குகின்றன. 11வது வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் இன்று முதல் சென்னை கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் விநியோகிக்கப்படும் என்றும் அதிக கூட்டத்தை தவிர்ப்பதற்காக சிறப்புக் கவுன்ட்டர் செயல்படும் என்றும் பாடநுல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 21ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் ஒரே ஒரு கவுன்ட்டர் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களை வாங்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து கடந்த இரண்டு நாள்களாக பெற்றோர் கூட்டம் அலைமோதுகிறது.

ஒரே ஒரு கவுன்ட்டர் செயல்படுவதால் புத்தகங்களைப் பெற நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து 11ஆம் வகுப்பு புத்தகங்களை மட்டும் விநியோகிக்க இன்று முதல் கூடுதலாக ஒரு சிறப்புக் கவுன்ட்டர் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

English Summary: 11th Std books to distribute the special Counter