இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 1.2 லட்சம் பணியிடங்களுக்கு 2.37 கோடி பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1.2 லட்சம் பணியிடங்களுக்கு 2.37 கோடி பேர் விண்ணப்பித்திருப்பதால் 2 மாதங்களுக்கு இந்தத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 17-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை இத்தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தேர்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் 3 ஷிப்டுகளாக நடைபெற்று வரும் இத்தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *