12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளிவந்த நிலையில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். மறுகூட்டலுக்கான முடிவு இன்று வெளியாகவுள்ளதாக தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 751 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் 3,344 பேர். மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்கள் 3,422 பேர்.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் மட்டும் scan.tndge.in என்ற இணையதளத்தில் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் 20-ம் தேதி காலை 10 மணிக்கு தாங்கள் படித்த பள்ளி தேர்வு மையத் தலைமையாசியரிடம் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்று, மதிப்பெண் மாற்றத்தை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary: +2 Revaluation Result Released.