தமிழகத்தில் அவ்வப்போது நிர்வாக வசதிக்காகவும் பிற காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் 32 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கு நடவடிக்கை, விருப்பத்தின் பேரில் பணியிட மாற்றம், நிர்வாகக் காரணங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதியாக பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 32 காவல் துறை துணை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக டிஜிபி (சட்டம் – ஒழுங்கு) அசோக் குமார் நேற்று உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட துணை கண்காணிப்பாளர்கள் இன்னும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

English Summary: 32 Assistant Superintendent of Police were transferred in Tamilnadu for Administrative and other reasons.