62வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ மற்றும் ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் ஆகிய திரைப்படங்கள் சிறந்த தலா இரண்டு தேசிய விருதுகளை பெற்று கோலிவுட் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும் மற்ற தமிழ் திரைப்படங்கள் பெற்ற விருதுகளின் விபரங்கள் வருமாறு:

சிறந்த துணை நடிகர் : பாபி சிம்ஹா ( ஜிகர்தண்டா)
சிறந்த படத்தொகுப்பாளர் : விவேக் ஹர்ஷன் ( ஜிகர்தண்டா)
சிறந்த பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் ( சைவம்)
சிறந்த பின்னணி பாடகி : உத்ரா உன்னிகிருஷ்ணன் (சைவம்)
சிறந்த தமிழ்த்திரைப்படம் : குற்றம் கடிதல் ( இயக்குனர் பிரம்மா)
சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம்: காக்கா முட்டை (தயாரிப்பு தனுஷ்)
சிறந்த சினிமா புத்தக எழுத்தாளர்: யூடிவி தனஞ்செயன்

மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கன்னட நடிகர் விஜய்க்கு ‘நான் அவனல்ல’ என்ற படத்தில் நடித்ததற்காகவும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது குயீன்’ படத்தில் நடித்த கங்கனா ரணாவத்துக்கும் கிடைத்துள்ளது. சிறந்த படத்திற்கான தேசிய விருது ‘கோர்ட்’ என்ற மராத்தி மொழி படம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெங்காலி மொழி படத்தை இயக்கிய ஸ்ரீஜித் முகர்ஜி என்பவருக்கு கிடைத்துள்ளது.

English Summary : 7 National Awards are won by Tamil film industry in 62nd National Film Awards which are announced today.