பொதுத் துறை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்குகின்ற ரூ.319 திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட வேலிடிட்டி 84 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் டெலிகாம் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற ரூ.99 மதிப்பிலான வாய்ஸ் கால் திட்டத்தின் வேலிடிட்டியை சமீபத்தில் 26 நாட்களில் இருந்து 24 நாட்களாக குறைத்தது. அந்த வகையில் மூன்று மாதம் அளவில்லா வாய்ஸ் கால் வழங்கி வரும் ரூ.319 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்ட நன்மைகள் வழங்குகின்றது.
மும்பை மற்றும் டெல்லி வட்டங்களை தவிர மற்ற தொலைத்தொடர்பு வட்டங்களில் கிடைக்கின்ற ரூ.319 ரீசார்ஜ் பிளானில் பயனாளர்களுக்கு அளவில்லா உள்ளூர் மற்றும் வெளிமாநில வாய்ஸ் கால் சலுகையை வழங்குகின்றது. இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுவதில்லை.தற்போது வேலிடிட்டி 84 நாட்களாக குறைக்கப்பட்டடுள்ளது. இதற்கு முன்பாக 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்தது.
மேலும் இந்நிறுவனம், சமீபத்தில் ரூ.525 மற்றும் ரூ.725 ஆகிய மாதந்திர போஸ்ட்பெய்டு திட்டங்களின் டேட்டா நன்மையை அதிகரித்துள்ளது. ரூ.525 பிளானில் 40 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா வாய்ஸ் கால் நன்மை மற்றும் ரூ.725 பிளானில் 50 ஜிபி டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகளை வழங்குகின்றது.