பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் கடலில் இறங்கி போராட்டம் செய்த விவசாயிகளை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், கரும்புக்கான கொள்முதல் விலையான ரூ.2,650-ஐ உடனடியாக வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் நிலங்களை ஜப்தி செய்யக்கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன் தினம் அரைநிர்வாணமாக சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், நேற்று சென்னை மெரீனா கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடலில் இறங்கி போராட்டம் செய்த 29 விவசாயிகளை நேற்று கைது செய்த போலீஸார் அவர்கள் அனைவரையும் சேப்பாக்கத்தில் உள்ள ஒரு சமுதாய நலக் கூடத்தில் அடைத்து வைத்து பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர். இந்த போராட்டம் காரணமாக சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் நேற்று சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary : Farmers who struggle to get down on the Sea Marina, arrested