விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை.தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஸ்டார்லிங்க் இணைப்பின் மூலம் இந்தியாவில் அதிவேக இணைய சேவைகளை வழங்க உள்ளது. இதற்காக, ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
