நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள கணக்கின் அடிப்படையில்தான் ஆதார் அட்டை வழங்கப்ப்ட்டு வருகிறது. இதில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்ய தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்வதற்காக வீடு வீடாக தகவல்களைச் சேகரிக்கும் பணி, கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல், பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கணக்கெடுப்புப் பணியின் காலத்தை நாடு முழுவதும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு தமிழகத்திலும் பின்பற்றப்பட உள்ளது. இதையடுத்து, தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்ய வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி, வரும் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை பதிவேட்டில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary: Extension until February 25 to register for the National Population Register.