தமிழகத்திலிருந்து வெளிநாடு சென்று பணி புரியும் போது எதிர்பாராத விதமாக ஊழியர் (தமிழர்) இறந்தால். அவரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த சூழலில் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் திருமணம் மற்றும் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்த தமிழர்கள் வெளிநாட்டுக்கு சென்று பணியாற்றி பணியின் போது இறந்தால் அவரின் குடும்பத்தில் மகன் மற்றும் மகள்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 20,000 மற்றும் கல்வி உதவித்தொகைக்காக ரூ. 12000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிதொகையை பெற விரும்புபவர்கள் தமிழர் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குடும்பத்தில் 2 மாணவர்களுக்கு மேல் இந்த உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.