கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவுற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 69 பதக்கங்களைப் பெற்று 8-வது இடத்தைப் பிடித்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் ஆகிய நகரங்களில் கடந்த 15 நாட்களாக நடைபெற்றன. இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டியில் 572 வீரர், வீராங் கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. இந்திய அணி 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் தடகளத்தில் 7 தங்கம் உள்பட 19 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 9 பதக்கம், ஸ்குவாஷில் 5 பதக் கம் வென்று இந்திய வீரர், வீராங் கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். ஹாக்கியில் மகளிர் பிரிவில் வெள்ளியும், ஆடவர் பிரிவில் வெண்கலத்தையும் இந்தியா கைப்பற்றியது. பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளியும், சாய்னா நெவால் வெண்கலமும் வென்ற னர். குத்துச்சண்டையில் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார்.

பிரிட்ஜ் போட்டியில் (சீட்டாட்டம்) இந்தியாவின் பிரணாப் பர்தான்-ஷிப்நாத் தே சர்க்கார் ஜோடி தங்கம் வென்று சாதனை புரிந்தது.

69 பதக்கங்களைக் குவித்த இந்தியாவுக்கு, ஆசிய விளை யாட்டுப் போட்டியில் இது புதிய வரலாற்று சாதனையாக அமைந் துள்ளது. சீனாவில் 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக் கங்கள் வென்றதே ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது. அதை விட தற்போது கூடுதலாக 4 பதக்கங்கள் கிடைத் துள்ளன. மேலும் 1951-ம் ஆண்டு நடந்த முதலாவது ஆசிய விளை யாட்டில் 15 தங்கம் வென்றதே, ஒரு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச தங்கப் பதக்க வேட்டையாக இருந்தது. அந்தச் சாதனை தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது.

பதக்கப்பட்டியலில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலங் களுடன் முதலிடத்தைப் பிடித்தது. ஜப்பான் 2-வது இடத்தையும், தென் கொரியா 3-வது இடத்தையும் பிடித்தது. போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உள் பட 98 பதக்கங்களை வென்றது.

இந்த நிலையில் நேற்று மாலை ஆசிய விளையாட்டு போட்டியின் கண்கவர் நிறைவு விழா ஜகார்த்தாவில் உள்ள ஜிபிகே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கண்களுக்கு விருந்தளிக்கும் கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், இசை, பாடல் நிகழ்ச்சிகள் நடந்தேறின. பாடல் நிகழ்ச்சிகளில் பாடகர்கள் சித்தார்த் ஸ்லாத்தியா, டெனடா ஆகியோர் ஹிந்தி பாடல்களான கோயி மில் கயா, குச் குச் ஹோத்தா ஹை, ஜெய் ஹோ ஆகியவற்றைப் பாடினர். இவற்றைப் பார்வையாளர்கள் மிகவும் ரசித்தனர். மேலும் பிரமாண் டமான வாண வேடிக்கையும் நடை பெற்றது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஸ்டேடி யத்தில் அமர்ந்து நிறைவு விழாவைக் கண்டு களித்தனர்.

விழாவில் இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, போட்டி அமைப்புக் குழுத் தலைவர் எரிக் தோஹிர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு, மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். போட்டி ஏற்பாடுகளில் 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி 2022-ல் ஹாங்சவ்வில் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிக் கான கொடி, ஹாங்சவ் நகர மேயர் ஜு லி யிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *