CBSE-logo4116சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வை 50 ஆயிரம் மாணவ மாணவிகளும், 10ஆம் வகுப்பு தேர்வை சுமார் 80 ஆயிரம் மாணவ மாணவிகளும் எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்று காத்திருந்த நிலையில் நேற்றிரவு அட்டவணையை மத்திய பாடத்திட்ட வாரியம் அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 1ஆம் தேதியும் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 2ஆம் தேதியும் தொடங்குகிறது.

12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை

மார்ச் 1ஆம் தேதி ஆங்கிலம், 3ஆம் தேதி பிசினஸ் ஸ்டடிஸ், 5ஆம் தேதி இயற்பியல், 8ஆம் தேதி வரலாறு, 9ஆம் தேதி வேதியியல், 14ஆம் தேதி கணிதம், 17ஆம் தேதி கணக்குப் பதிவியல், 21ஆம் தேதி உயிரியல், 26அம் தேதி கம்ப்யூட்டர், 28ஆம் தேதி உடற்கல்வியியல், 29ஆம் தேதி பெயிண்டிங், 31ஆம் தேதி பொருளாதாரம், ஏப்ரல் 7ஆம் தேதி புவியியல், ஏப்ரல் 12ஆம் தேதி ஹோம் சயின்ஸ்.

10ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை

மார்ச் 2ஆம் தேதி அறிவியல், 3ஆம் தேதி பிரெஞ்ச், 8ஆம் தேதி தமிழ் இந்தி ஏ, பி, 10ஆம் தேதி, சமூக அறிவியல், 14ஆம் தேதி எப்.ஐ.டி., 15ஆம் தேதி ஆங்கிலம், 19ஆம் தேதி கணிதம், 21ஆம் தேதி சமஸ்கிருதம்.

English Summary: Board Exam Timetable released for CBSE.