இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யுமாறு ஆய்வுக் குழுவினர்களை சென்னை  மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, ” தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து,சான்றளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை அலுவலர் உள்ளிட்டோர் சேர்ந்த ஆய்வுக் குழுவானது மாவட்டந்தோறும் வாகனங்களை ஆய்வு செய்து சான்றளித்து வருகிறது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மே 14 முதல் மே 22 வரை சென்னையில் உள்ள வட்டார பகுதிகளுக்குள்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் நிலை குறித்து, ஆய்வுக்குழுவினர் முறையான ஆய்வு செய்து, சான்றளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்”

இவ்வாறு அந்த செய்திக்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Chennai District Collector advised the Officers to review Vehicles of Chennai Schools.