கோலிவுட்டில் இரண்டு ஹீரோயின்கள் படம் என்றாலே இயக்குனருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். இருவருக்கும் சமமான முக்கியத்தும் இல்லை என்றால் இயக்குனர் பாடு திண்டாட்டம்தான். இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு இரு ஹீரோயினகள் கதையொன்றை தயார் செய்துவிட்டு இரண்டு பெரிய ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த பத்து வருடங்களாக கோலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருந்து வரும் த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இன்னும் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. தற்போது தனது  கதைக்கு இருவரும் மிகப்பொருத்தமாக இருப்பார்கள் என கருதியதால் இருவரையும் தனது படத்தில் இணைக்க அவர்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருவருமே இந்த படத்தில் நடிக்க முன்வந்ததற்கு முக்கிய காரணம், இது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் என்பது மட்டுமின்றி இந்த படத்தில் ஹீரோவே கிடையாது என்பதுதான். எனவே இருவரும் சிறப்பாக நடித்தால் ரசிகர்களிடம் நல்ல பெயரை எளிதில் வாங்கிவிடலாம் என்பதால் இருவருமே தங்களது பிசியான ஷெட்யூல்களுக்கு மத்தியில் வெங்கட்பிரபுவுக்கு காஷீட் ஒதுக்கி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும், இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary: Trisha and Nayantara Adjusted their Call Sheets for Venkatprabhu Film.