chennai222சென்னை நகர மக்கள் தங்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள், புகார்கள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்க இலவச எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்கள் மூலம் சென்னை நகர மக்கள் கட்டணமில்லாமல் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

சென்னை நகர மக்களுக்கு ஏற்கனவே 1913 என்ற எண் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்கள் மூலம் தினம் வரும் 400 முதல் 500 புகார்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது விதிமீறி கட்டப்படும் கட்டிடங்கள் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க நீதிமன்ற அறிவுரைப்படி புதிய கட்டணமில்லா தொலைபேசி வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

1800-425-1914 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் போன் செய்து தங்கள் புகாரை பதிவு செய்யலாம். பூங்கா, சாலைகள், தெரு, விளக்குகள், சாக்கடை, சுகாதார வசதி, தெருநாய் தொல்லை, கொசு தொல்லை, கட்டிடங்கள் விதிமீறி கட்டப்படுதல் போன்ற புகார்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம்.

கட்டிட விதிமீறல் பற்றி இந்த எண்ணில் புகார் பதிவு செய்தால் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக சீல் வைக்கப்படும்.

English Summary:Chennai Corporation introduced a free phone number to report complaints