பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற தற்போது சென்னை மாநகராட்சி புகார் பிரிவு எண், இணையதளம் ஆகியவற்றின் மூலம் பெற்று குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி புகார்களை பொதுமக்களிடம் இருந்து பெற புதிய வகை ஆப்ஸ் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளது. ஆன்ட்ராய்டு செல்போன்களில் இயங்கும் நவீன ஆப்ஸ்ஸை மாநகராட்சி இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது, ‘புதிய ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வடிவமைக்கும் பணி தற்போது முடிவடைந்து சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், சோதனையில் திருப்தி ஏற்பட்ட பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த ஆப்ஸ் உடனடியாக வழங்கப்படும் என்றும் கூறினர். மேலும் தற்போதுள்ள நிலையில் இந்த ஆப்ஸை ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் விரைவில் தமிழில் புகார் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

அந்த புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனே அனுப்பப்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது மாநகராட்சி புகார் பிரிவு எண்ணான 1913, மாநகராட்சி இணையதளமான www.chennaiaicptporation.gov.in ஆகியவற்றில் பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Chennai Corporation is introducing new Apps