chennaicorporationசென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ‘அம்மா குடிநீர் பாட்டில் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கு ரூ.10 விலையில் சுத்தமான மினரல் வாட்டர் கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக 20 லிட்டர் கேன் குடிநீர் திட்டத்தை தொடங்க சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்து வருகிறது.

தற்போது 20லிட்டர் கேன் வாட்டர் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டு வரும் நிலையில் மலிவு விலையில் “அம்மா’ 20 லிட்டர் கேன் குடிநீர் திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்துவருகிறது.

சென்னையை பொறுத்தவரை வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினர்களும் 20 லிட்டர் கேன் வாட்டரை பயன்படுத்தி வரும் நிலையில், பலர் இந்த கேன் வாட்டர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறி வருகின்றனர். நடுத்தர வருவாய் பிரிவு மக்களின் இந்த மனக்குறையை போக்க சென்னை மாநகராட்சியே மிகக் குறைந்த விலையில் கேன் குடிநீரை வழங்கும் திட்டம் சென்னை மாநகராட்சியின் 2014-15-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை நேற்று நேரில் சந்தித்தனர்.

கேன் குடிநீர் திட்டம் தொடங்குவது குறித்து ஆலோசிக்க கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மேயரைச் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது மலிவு விலை குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

English Summary:Chennai Corporation’s 20 liter drinking water scheme. As soon as possible