கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையில், கான்டினென்டல் என்ற வாகன தொழில்நுட்ப நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஐஐடி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கார் போன்ற வாகனங்களில் கணினி தொழில்நுட்ப உதவியுடன் உயர் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலான ஆராய்ச்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. இது இந்த நிறுவனத்துடன் நிகழாண்டில் போடப்படும் இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.
முதலில் உயிரி தொழில்நுட்பத்துடன்கூடிய மேம்பட்ட இயந்திர ஆராய்ச்சிக்காகப் போடப்பட்டது. தற்போது, வாகனப் பாதுகாப்பை மேம்பட்டுத்தும் வகையிலான கணினி தொழில்நுட்பத்துடன்கூடிய சைபர் இயக்கவியல் நடைமுறை (சிபிஎஸ்) ஆராய்ச்சிக்காகப் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.