சென்னை நகரின் மொத்த மக்கள்தொகை 66 லட்சத்து 97 ஆயிரத்து 153 என சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள வரைவு கணக்கெடுப்பு பட்டியல் தெரிவித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நடத்தப்ட்டு வந்த சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் சென்னையிலும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது சென்னை மாநகருக்கான சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்து, அதன் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது., இந்த வரைவு பட்டியலின்படி சென்னை நகரின் மொத்த மக்கள் தொகை 66,97,153. ஆகும்.
மேலும் பகுதிவாரியாக உள்ள மக்கள் தொகைகளின் எண்ணிக்கை பின்வருமாறு: திருவொற்றியூர் 3,22,600. மணலி 92,795. மாதவரம் 1,94,939. தண்டையார்பேட்டை 4,24,277. ராயபுரம் 4,17,835. திருவிக நகர் 11,09,287. அம்பத்தூர் 4,83,357. அண்ணா நகர் 5,75,016. தேனாம்பேட்டை 5,85,899. கோடம்பாக்கம் 6,04,888. வளசரவாக்கம் 3,67,465. ஆலந்தூர் 2,32,974. அடையாறு 8,60,084. பெருங்குடி 2,32,482. சோழிங்கநல்லூர் 1,93,255.
சென்னையில் மொத்தம் 16 லட்சத்து 82 ஆயிரத்து 91 வீடுகள் உள்ளதாகவும், அதிகபட்சமாக திருவிக நகர் மண்டலத்தில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 569 வீடுகளும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 23 ஆயிரத்து 178 வீடுகளும் உள்ளதாக அந்த வரைவு பட்டியல் கூறுகின்றது.
இது தவிர தொழில், கல்வி, சாதி, வருமானம், மின் இணைப்பு, குடிநீர் வசதிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டில் உள்ள அறைகள் உள்ளிட்ட சமூக பொருளாதார தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. வார்டு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் இந்த வரைவு பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவுப் பட்டியல் ஜூன் 26-ம் தேதி இறுதிசெய்யப்படும். அதற்கு முன்னர் பொதுமக்கள் இதை பார்வையிட்டு அதில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வார்டு, மண்டல அலுவலகங்களில் ஜூன் 26ஆம் தேதிக்கு முன்பு வழங்கவேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary: Chennai Corporation releases the Chennai Population details. Chennai Population reaches 67 lakhs.