சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளில் உள்ள குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று சாலைகளில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர்.

பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பரசுராமன் தெரு, முத்தையா மேஸ்திரி தெரு, ஜெயராமன் தெரு உள்பட 10க்கும் மேற்பட்ட தெருக்களில் கடந்த ஒருசில ஆண்டுகளாக சாலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுவதோடு அவை கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாகவும் மாறியுள்ளது.

இங்குள்ள பழுதுபட்ட சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை மாநகராட்சிக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால், நேற்று காலை அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர். இந்த தகவலை அறிந்த மநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து விரைவில் சாலையை சீரமைத்து தருவதாக உறுதியளித்ததால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English Summary : Since no action is taken to reform the damaged roads by Washermanpet public, the staged a protest by seedling planting on road.