பாஸ்போர்ட் பெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது ஒரிஜினல் கல்வி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு 10ஆம் வகுப்பு சான்றிதழும், பிறப்பு சான்றிதழும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து, தாங்கள் அந்த நிறுவனத்தில்தான் கல்வி பயில்கிறோம் என்ற சான்றிதழை கல்வி நிறுவன அதிகாரியின் கையெழுத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அத்துடன் கல்வி நிறுவனங்கள் அளித்த மாணவர் அடையாள அட்டையையும் சமர்ப்பித்தால் போதும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பாஸ்போர்ட் பெறுவதற்கு வங்கி கணக்கு புத்தகம் ஆவணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதில் பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளின் கணக்கு புத்தகங்களையும் ஆவணமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பாஸ்போர்ட் பெறுவது குறித்த விவரங்கள் பெற 24 மணி நேரமும் செயல்படும் 1800 258 1800 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

English Summary : Now School or College students can apply passport without providing their original certificate. For more information contact toll free number – 1800 258 1800.