சென்னையில் மே மாதம் 12ஆம் தேதி முதல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் தவறாது இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான 2016-18-ஆம் கல்வியாண்டுக்கு தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் நடைபெற்றது. அரசு கல்லூரி இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 854 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 751 இடங்கள் நிரம்பியுள்ளது.

இந்நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 89 இடங்கள், 14 முதுநிலை பல் மருத்துவ இடங்கள் என மொத்தம் 103 காலியிடங்களுக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு மே 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறவுள்ள்து. முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்காதவர்கள் 2ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்றும் முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடம் ஒதுக்கப்பட்டு, குறிப்பிட்ட கல்லூரியில் சேராதவர்கள் அல்லது கல்லூரியில் சேர்ந்து இடைநிறுத்தம் செய்தவர்களும் இதில் பங்கேற்க இயலாது என்றும் தேர்வுக் குழு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English Summary : Counselling for PG Medical course will be conducted on May 12th and 13th.