ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது முதலில் கவனிக்க வேண்டியது போலி பல்கலைக்கழகங்கள் குறித்துதான் என்பதை அவ்வப்போது அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் மத்திய அரசு இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள் குறித்து அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 22-க்கும் அதிகமான போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக மத்திய அரசு இன்று தகவல் வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தகவலின்படி யு.ஜி.சி. சட்டம் 1956-ஐ மீறி இந்தியாவின் பல பகுதிகளில் 22 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவை உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 9 போலி பல்கலைக்கழங்களும், டெல்லியில் 5 போலி பல்கலைக்கழங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மேற்கு வங்காளத்தில் 2 போலி பல்கலைக்கழங்களும், பீகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஒடீசாவில் தலா ஒரு போலி பல்கலைக்கழகமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி பல்கலைக்கழகங்களை தெரிந்து கொள்ள மாணவர்கள் அனைவரும் மத்திய அரசின் http://www.knowyourcollege-gov.in என்ற இணையதளத்தில் சென்று அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களின் விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் இந்த விபரங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள மொபைல் அப்ளிகேஷன் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Website to find out the details of Approved Universities. Central Government announced.