ரயில்வே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்வதற்காக ரயில்வே நிறுவனம் தொடங்கியுள்ள அதிகாரபூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பதிவாகியிருந்த கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ஊடுருவல் நடைபெற்றதை மஹாராஷ்ட்ர காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். மேலும் இந்த இணையதளத்தின் வணிகப் பக்கத்தில் சில நபர்கள் ஊடுருவி, தகவல்களைத் திருடியதாக சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் தரப்பில் இருந்தும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மற்ற செயல்பாடுகள் வழக்கம்போல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Customer information stolen from IRCTC website.