பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படும் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழும் இணைத்து அனுப்ப வேண்டிய நிலை உள்ளதால் இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியல் ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்றும் மாணவர்களுக்கு விரைவில் நிரந்தர மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் தாங்கள் படித்து முடித்த பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

English Summary: Dummy Mark Sheets to be issued for +2 Students today.