carfreeday1692015சென்னை போன்ற பெருநகரங்களில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்கள் போன்ற நான்கு சக்கர வாகனங்களால் பெரும் இடநெருக்கடி, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஆகியவை அன்றாடம் நடைபெறும் ஒரு நிகழ்வாக உள்ளது. சந்து பொந்து போன்ற சிறிய தெருக்கள் வரை அண்ணா சாலை போன்ற பெரிய சாலைகள் வரை தினமும் ஆயிரக்கணக்கான கார்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஒருசில வெளிநாடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிட்ட சில மணி நேரம் கார்களே இயங்காத நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளை ஊக்குவிக்கும் வகையில் கடைபிடிக்கப்படும் இந்த திட்டத்துக்கு பல நாடுகளின் பொதுமக்கள் தங்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இந்த நடைமுறையை சென்னையிலும் கடைபிடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளை போல சென்னையிலும் கார்கள் இயக்கப்படாத ஞாயிற்றுக்கிழமை என்ற திட்டத்தை செயல்டுத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக அக்டோபர் மாதம் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இதை செயல்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பெசன்ட்நகர் கடற்கரை, 2வது நிழற்சாலை உள்ளிட்ட பகுதிகளை தேர்வு செய்துள்ள அதிகாரிகள், அந்த பகுதியில் கார்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை கார்கள் இயக்கப்பட மாட்டாது. ‘நம்ம சென்னை நமக்கே’ என்ற கோஷத்துடன் இதை செயல்படுத்துகிறார்கள். இதில் ஏராளமான பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் கோவையில் பரீட்சார்த்தமாக இந்த திட்டத்தை அமுல்படுத்தினர். அதில் 15 ஆயிரம் பேர் பங்கெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Elliot’s Beach in Chennai Cars Functional Area. In October4 decision to adopt.