வாருடந்தோறும் சென்னையில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலயத்தில் நேற்று போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி 20 இடங்களில் இன்று பிரசாரம் நடத்தப்படுகிறது. தலை கவசம் அணியாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு தலை கவசம் காவல் துறையினர் வழங்கினார்.

மேலும் சென்னையில் வரும் 14ஆம் தேதி வரை பல்வேறு போக்குவரத்து தொடர்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு வரும் 19, 20, 21 ஆகிய தேதிகளிலும் போக்குவரத்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கமிஷனர் ஜார்ஜ், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.