நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருப்பது தான். எவ்வளவு காலம் உயிர் வாழ்கிறோம் என்பதை விட எவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தோம் என்பது தான் சிறந்த வாழ்வாக இருக்க முடியும். நாம் உண்ணும் உணவிலும், அன்றாட பழக்க வழக்கத்திலும் தான் இது போன்ற நன்மைகள் அடங்கி உள்ளன.

நீண்ட ஆரோக்கியத்துடன் அதிக காலம் வாழ வைக்கும் தன்மை சில கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ளது. இந்த வகை உணவுகளில் அதிக பட்சம் நல்ல கொழுப்புகளே உள்ளது. ஆதலால் உடலுக்கு இவை பலவித நன்மைகளை தரும். என்னென்ன உணவுகள் அவை என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.

பருப்பு வகைகள்: பாதாம், வால்நட்ஸ், முந்திரி, பிஸ்தா முதலிய பருப்பு வகைகளில் கொழுப்பு சத்து இருந்தாலும் இவை உடலுக்கு நன்மை தான் செய்யும். முக்கியமாக உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பருப்புகள் உதவுகின்றன. தினமும் இவற்றில் 5 முதல் 10 பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ஆயுள் கூடும்.

தேங்காய் எண்ணெய்: பலவித ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சமைக்க ஆரோக்கியம் கொண்ட தேங்காய் எண்ணெய் உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைவு. கூடுதலாக வயிற்று பகுதியில் உள்ள கிருமிகளையும் இது அழித்து விடும்.

மீன் : ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன் சார்ந்த உணவுகளில் அதிகம் உள்ளது. இவை உடல் நலத்தை பாதுகாக்க பெரிதும் பயன்படுகின்றன. மூளையின் திறன், கண் பார்வை, இதய ஆரோக்கியம் முதலிய பலவிதத்திலும் இது உதவுகிறது.

முட்டை: தினசரி 1 அல்லது 2 வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வருவதால் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். இது போன்ற டயட் உணவுகளை காலையில் சாப்பிட்டால் உடல் எடை சட்டென குறைந்து விடும்.

டார்க் சாக்லேட்: கோக்கோ அதிக அளவில் உள்ள டார்க் சாக்லேட்டை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும். கூடவே, நலன் கொலெஸ்ட்ராலின் அளவையும் இது அதிகரிக்கும். ஆதலால், கோக்கோ நிரம்பிய டார்க் சாக்லேட் சாப்பிட்டால் நற்பயன்கள் உங்களை சேரும்.

இந்த 5 உணவுகளும் உங்களை நீண்ட ஆயுடன் பல காலம் ஆரோக்கியமாக வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *