என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் 6-வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்: சிறந்த மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலை. தேர்வு ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், பெங்களூரு ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் நிறுவனம்) 2-ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3-ம் இடத்தையும், டெல்லி ஐஐடி 4-ம் இடைத்தையும் பிடித்துள்ளன.