சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம்

ஜெயா டிவியில் வரும் சுதந்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு சொல்லின் செல்வர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

சுதந்திர இந்தியாவில் நமது வாழ்க்கை சங்கடமா, சந்தோஷமா என்ற தலைப்பில் இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

இன்றைய வாழ்க்கை சங்கடம்தான் என்ற அணியில் நல்லாசிரியர் திரு.ரவிக்குமார், திருமதி.வேம்பு பாலா, திரு.நவஜோதி ஆகியோர் பங்கேற்று இன்றைய காலக்கட்டத்தில் நாம் அன்றாடபட்டுவரும் துன்பங்களை பட்டியலிட்டு தன் கருத்துக்களை முன்வைத்தனர்.

சிற்சில துன்பங்கள் இருந்தாலும் நம் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாகவே இருக்கிறது. அவற்றை கண்டுகொண்டு நாம் மனநிறைவு அடைய வேண்டும் என்ற கருத்தை ஆர்ஜே விஜய், செல்வி.ஐஸ்வர்யா, திரு.உமாசங்கர் ஆகியோர் வலியுறுத்தி பேசினர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பேசிய நடுவர் மணிகண்டன், இருதரப்பு வாதங்களையும் பகுத்தாய்ந்து நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பு என்ன என்பதை சுதந்திர தினத்தன்று கண்டுகளியுங்கள்.

 

பார்த்தேன் ரசித்தேன் பரத்வாஜ்

ஆட்டோகிராப், ஜெமினி, அட்டகாசம் உட்பட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அவர் தான் இசையமைத்த ஹிட்டான பாடல்களை பாடியும், அப்பாடல்கள் உருவான விதத்தையும் சுவாரஸ்யமாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ‘உனைப்பார்த்த பின்புநான்’, ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘ஆப்பிள் பெண்ணே’ உள்ளிட்ட பல பாடல்களை பின்னணிப்பாடகர்களுடன் பாடியுள்ளார். மேலும், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரத்தியேகமாக பாரதியார் பாடலுக்கு இசையமைத்து ஜெயா டிவி மூலமாக நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். இந்நிகழ்ச்சியை மோகனா தொகுத்துவழங்கியுள்ளார்.

 

எது சுதந்திரம்

தொகுப்பாளர் திண்டுக்கல் சரவணன் கேட்க்கும் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பிரபல நடிகர் அருண் விஜய்,ஐஸ்வர்யா மேனன் ஆகியோருடன் பொது மக்கள் கூறும் வித்யாசமான பதில்களை கொண்ட ஜாலியான நிகழ்ச்சி ‘எது சுதந்திரம்’ .இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 அன்று இரவு 9:30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

விருந்தினர் பக்கத்துடன் சுதந்திர இந்தியவில் சென்னையின் பக்கத்தை கூறும் நாம் பெற்ற சுதந்திரம் என்னும் சிறப்பு பகுதியுடன் காலை 7.30 மணிக்கு சிறப்பு கலைமலர் ஒளிபரப்பாகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *