1. ‘பாலமுரளி கிருஷ்ணா நாத மகோத்ஸவம்’ – பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்று திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு இசை வாயிலாக மரியாதை செலுத்திய மற்றும் பிரபல இசைக் கலைஞர்களான மிருதங்க வித்துவான் டாக்டர். டி.கே.மூர்த்தி, வயலின் மேதை எம். சந்திரசேகரன் மற்றும் கடம் புகழ் விக்கு விநாயக்ராம் அவர்களுக்கு 2022 –ம் ஆண்டிற்கான திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் நினைவாக விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 15 காலை 10.00 மணிக்கு

2. கரூரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற டாக்டர். ஜெயராஜமூர்த்தி தலைமையில் பிரபல பேச்சாளர்களான கொங்கு மஞ்சுநாதன், முனைவர் பழனி,புதுகை பாரதி,மதுரை முத்து, அன்னபாரதி,வேலூர் அன்பு பங்குபெற்று சிந்தனை மற்றும் ,நகைச்சுவையைத்தூண்டும் விதமாக தங்களது பேச்சால் மக்களை அசத்திய ‘நாகரிக மாற்றங்களால் குடும்ப உறவுகள் சீர்படுகின்றனவா? சீரழிக்கப் படுகின்றனவா?’ சிறப்புப் பட்டிமன்றம் ஆகஸ்ட் 15 காலை 11.00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

3. மதுரை காந்தி திடலில் பிரம்மாண்டமாய் நடைபெற்ற இளம் தலைமுறை பாடகி சிவாங்கி, இசை நாயகர் திரு. மனோ மற்றும் பிரபல பாடகர்கள் பங்குபெற்று இசைஞானி இளையராஜா பாடல் மற்றும் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்திய அசத்தலான இசைக் கொண்டாட்டம் ‘எங்க ஊரு பாட்டுகாரன்’ ஆகஸ்ட் 15 இரவு 08.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

4. ‘குழந்தைகள் பார்வையில் சுதந்திரம்’ – சுதந்திரப் போராட்டம் பற்றியும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும் குழந்தைகள் வேடம் அணிந்து பேசியும், நடித்துக் காட்டியும் தங்களது தனித்திறமையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 காலை 08.00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *