விஜயவாடா – செகந்திராபாத் நகரங்களுக்கு இடையே புதிய சூப்பர் பாஸ்ட் ரெயில் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரெயில் இரு நகரங்களுக்கு இடையே செல்லும்போது இடையில் ஒரே ஒரு நிறுத்தத்தில் மட்டுமே நிற்கும். மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கொடியசைத்து இந்த ரெயிலை நேற்று தொடங்கி வைத்தனர்.
முதல்கட்டமாக, ஆந்திராவின் புதிய தலைநகரத்திற்கு தற்போது அரசு அலுவலகங்கள் மாற்றப்பட்டு வருவதால் அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்களின் வசதிக்காக விஜயவாடா மற்றும் செகந்திராபாத் இடையே இந்த ரெயில் அறிமுகமாகியுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த ரெயில் இயங்கும். 351 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 6 மணிநேரத்தில் இந்த ரெயில் சென்றடைகிறது. விஜயவாடாவில் இருந்து செகந்திராபாத் வரையிலான பாதையில் வழியில் குண்டூரில் மட்டுமே இந்த ரெயில் நின்று செல்லும்.
இந்த ரெயிலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் இதுபோன்ற சூப்பர் ஃபாஸ்ட் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary:Introducing Super Fast train only stops at one stop.