guindyengineeringcollege10ம் வகுப்பு முடித்த பின்பு ஐடிஐயில் சேரும் மாணவர்கள் அதன்பின்னர் உயர்கல்வியை தொடர வேண்டும் என்றால் மீண்டும் 11வது மற்றும் 12வது வகுப்புகளில் படிக்க வேண்டும் என்ற நிலை இதுவரை இருந்தது. ஆனால் இனிமேல் அந்த நிலை இருக்காது என்றும் ஐடிஐ படித்தவர்கள் நேரடியாக கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்ந்து படிக்கலாம் என்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.

8 மற்றும் 10 ம் வகுப்பை முடித்தவர்கள் ஐடிஐ படிப்பில் சேர்ந்து படிப்பது வழக்கம். ஐடிஐ படிப்பை முடித்த பிறகு இன்னும் உயர்கல்வி பயில வேண்டுமென சிலர் ஆசைப்படுவார்கள். ஒருசிலர் வேலை கிடைக்கவில்லை அல்லது இன்னும் தங்கள் படிப்பை மேம்படுத்திக் கொள்ள என பல காரணங்களினால் உயர்கல்வி பயில ஆசைப்படுவர்கள். ஆனால் அதற்கு அவர்கள் 11வது மற்றும் 12வது படிக்காதது தடையாக இதுவரை இருந்தது.

எனவே இனி 8 ம் வகுப்பு முடித்த பிறகு ஐடிஐ படித்தவர்கள் நேரடியாக 10ம் வகுப்பில் சேர முடியும். அதேபோல 10ம் வகுப்பு முடித்த பிறகு ஐடிஐ படித்தவர்கள், நேரடியாக கல்லூரியில் முதலாமாண்டு சேர முடியும். அதேபோல என்ஜினீயரிங், பாலிடெக்னிக் போன்ற உயர் கல்வியிலும் சேர முடியும். ஒரு ஆண்டுக்கு 18 லட்சம் மாணவர்கள் ஐடிஐ படிப்பை முடிக்கிறார்கள். இதற்கான முறையான அறிவிப்பை ஜூலை மாதம் 17ம் தேதி பாரத் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என்றும் அமைச்சர் ரூடி தெரிவித்துள்ளார்.

English Summary: ITI Educated also Directly Joining in Colleges. Central Minister Information.