சிறப்பு பட்டிமன்றம்

ஜெயா டிவியில் வரும் ஆயுத பூஜை தினத்தன்று பிரபல பேச்சாளர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

மனிதனின் மதிப்பை உயர்த்துவது கல்விச்செல்வமா, பொருட்செல்வமா என்ற தலைப்பில் இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

மனிதனின் மதிப்பை கல்விச்செல்வமே உயர்த்துகிறது என்ற அணியில் திரு.ரவிக்குமார், திரு.உமாசங்கர், செல்வி.ஹேமவர்த்தினி ஆகியோரும், பொருட்செல்வமே என்ற அணியில் திரு.தாமல் சரவணன், திருமதி.அட்சயா, திரு.காளிதாஸ் ஆகியோரும் பங்கேற்று மிகச்சிறப்பான முறையில் தங்கள் கருத்துக்களை எடுத்துவைக்கின்றனர்.

நிகழ்ச்சியின் நிறைவுப்பகுதியில் இரு தரப்பு வாதங்களை சீர்தூக்கி, பகுப்பாய்ந்து, சில அரிய நூல்களை அறிமுகம் செய்தும், மேற்கொள் காட்டியும் அற்புதமான தீர்ப்பை நிகழ்ச்சியின் நடுவர் மணிகண்டன் வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி ஆயுத பூஜை நாளான அக்டோபர் 23ம் தேதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.



சிறப்பு காலைமலர்

ஜெயா டிவியில் வரும் ஆயுத பூஜை தினமான அக்டோபர் 23, திங்கட்கிழமையன்று சிறப்பு காலை மலர் நிகழ்ச்சியில் ’ஜெயில்’ பட புகழ் நடிகை அபர்ணதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

விஜயதசமி நாளன்று ஒளிபரப்பாகவுள்ள காலை மலர் நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பங்கேற்று தான் கடந்து வந்த பாதையையும், சந்தித்த மனிதர்கள் பற்றியும் மனம் திறந்து பேசுகிறார். இந்நிகழ்ச்சியானது ஆயுத பூஜை நாளன்றும், விஜயதசமி தினத்தன்றும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *