கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிற்பகல் 1.30 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பாராட்டுக்களை வாரிக்குவித்த “கலகத்தலைவன்” திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்ப்பரேட்டுகளின் அநீதியை தட்டிக்கேட்கும் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். நாயகியாக நிதி அகர்வாலும், மிரட்டலான வில்லனாக “பிக்பாஸ்” புகழ் ஆரவ் நடித்திருக்கிறார்கள். மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் கலையரசன், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றார்கள்.
கார்ப்பரேட் உலகில் நடக்கும் அத்துமீறல் எளிய மனிதர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதையும், கார்ப்பரேட்களின் பின்னணி அரசியலையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஆரல் கொரோலி, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்கள். தில்ராஜ் ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார்.