எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசையில் 17 மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 31,332 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இந்த படிப்புகளுக்கு 20 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 2,257 இடங்கள்தான் உள்ளது.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தரவரிசை பட்டியலை இன்று அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்டார். இதில் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்து 17 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

முதல் ரேங்கை நிஷாந்த் ராஜனும், 2வது ரேங்கை முகேஷ் கண்ணனும், 3வது ரேங்கை பிரவீனும் பிடித்துள்ளனர். 4வது ரேங்கை நிவாஷூம், 5வது ரேங்கை சரவணக்குமாரும், 6வது ரேங்கை கவுதம ராஜும், 7வது ரேங்கை மோதி ஸ்ரீயும், 8வது ரேங்கை திராவிடனும், 9வது ரேங்கை பிரவீன் குமாரும் பிடித்துள்ளனர். 10வது ரேங்கை பைஸூம், 11வது ரேங்கை சுரண் ராமும், 12வது ரேங்கை ரேணுகாவும் பிடித்துள்ளனர்.

மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

English Summary : 17 students got first place with 200 cut-off marks in MBBS and BDS ranking list.