mentalhelth28416தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இதனையடுத்து 104 மருத்துவ சேவை இன்று அதாவது வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளதாகவும், இந்த சேவையில் மாணவர்களுக்கு மனநல ரீதியில் சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 104 சேவை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் 24 மணி நேர மருத்து உதவி சேவை மையத்தின் மூலம் கடந்த ஆண்டு, பொதுத் தேர்வு தொடர்பாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டும் பொதுத்தேர்வுகள் குறித்து இரண்டு கட்டமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றனர்.

மூன்றாம் கட்டமாக தேர்வு முடிவுகள் குறித்த மனநல ஆலோசனைகள் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 3 உளவியல் ஆலோசகர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற உள்ளனர். தேர்வு முடிவு குறித்த எதிர்பார்ப்பு, பயம், கவலை, தற்கொலை எண்ணம் உள்ளிட்ட பல்வேறு மனநிலையில் உள்ள மாணவர்கள் ஆலோசனைக்கு அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary: Mental Health Counseling on account of Public Exam Result Released.