இந்து, பௌத்த, சமண சமயங்களின் படிமவியல் ஆய்வுக் கருத்தரங்கம் ஒன்று சென்னையில் வரும் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு சி.பி.ராமசாமி அய்யர் அவர்களின் பொன்விழா நிறைவு ஆண்டு என்பதால் இந்த விழாவை சி.பி. ராமசாமி அய்யர் அறக்கட்டளை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் சுதர்ஷன் ராவ், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோர் கருத்தரங்கைத் தொடக்கி வைக்க உள்ளனர். இதில், இந்திய கலாசார, பாரம்பரிய, மதம், கலை, சமூக மரபுகளை வெளிக்கொணரும் வகையில் படிமவியல் (படிமக்கலை) துறை தொடர்பான கட்டுரைகள் இடம்பெற உள்ளன.

மேலும், இளம் தலைமுறையினர் உள்பட சமய படிமங்கள் (கோயில் சிலைகள்) குறித்து அறிவியல், ஆன்மிக அடிப்படையில் விவாதிக்க உள்ளனர்.
இந்தக் கருத்தரங்குக்கு பல்வேறு நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றனர்.

English Summary : National Conference of Iconography organized by C.P.R. Institute of Indological Research, The C.P. Ramaswami Aiyar Foundation, Chennai.