தேசிய தீயணைப்பு சேவை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி அனுசரிக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் இன்று இந்த தினம் மிகச்சிறப்பாக அனுசரிக்கப்பட உள்ளது.

தீயணைப்பு சேவை தினத்தை முன்னிட்டு தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த ஆறு பேர்களுக்கு சிறந்த பணிக்கான பதக்கம் இன்று வழங்கப்படுகிறது. பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் பின்வருமாறு:

1. ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி தாண்டவன்
2, சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த முதன்மை தீயணைப்பு அலுவலர் விஜயன்
3. தக்கலை முதன்மை தீயணைப்பு அலுவலர் பாலாஜி
4. ராணிப்பேட்டை தீயணைப்பு அலுவலர் சரவணகுமார்
5. ராணிப்பேட்டை தீயணைப்பு அலுவலர் சுரேஷ்குமார்
6. சென்னை கிண்டி தீயணைப்பு அலுவலர் பிரசாத்

ஆகிய ஆறு பேர்களுக்கும் தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நிலைய அதிகாரி தாண்டவனுக்கு ரூ.3000, முதன்மை தீயணைப்பு அலுவலர்கள் விஜயன் மற்றும் பாலாஜிக்கு தலா ரூ.2500, தீயணைப்பு அலுவலர்கள் சரவணகுமார், சுரேஷ்குமார் மற்றும் பிரசாத்திற்கு தலா ரூ.2000 ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த பதக்கம் மற்றும் பரிசுகளை இன்று சென்னையில் நடைபெற இருக்கும் விழா ஒன்றில் தமிழக கவர்னர் ரோசய்யா வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : National Fire Service Day celebrated in Chennai