ரயில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே அடிக்கடி சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. கோடை விடுமுறையில் சுற்றுலா செல்பவர்கள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது திருப்பதிக்கு சென்று வரும் பக்தர்களின் வசதிக்காக ஏசி வசதியுடன் கூடிய புதிய ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அசோக் குமார் அகர்வால் (பொறுப்பு) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “புதுச்சேரி – சென்னை – திருப்பதி மார்கத்தில் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஏசி வசதியுடன் கூடிய ரயில் விரைவில் இயக்கப்படும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இன்னும் இயக்காமல் இருக்கும் ஒரே ஒரு ரயில் சேவையான புதுச்சேரி – சென்னை – திருப்பதி ரயில் விரைவில் இயக்கப்படும் என்றும், அதனை மத்திய ரயில்வே அமைச்சர் வெகுவிரைவில் தொடங்கி வைப்பார் என்றும் அவர் கூறினார்.

இந்த ரயில் சேவை இயக்கப்பட்டால் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் திருப்பதிக்கு சென்று வருவது எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : New AC Train was added for Pondicherry – Chennai – Tirupati route by Southern railways.