met-dept-21102015
வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட ஒரு வாரம் தள்ளிப்போகும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை எப்பொழுதும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அதிக இடங்களில் மழை தரும். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்க இன்னும் ஒருவாரம் காலம் ஆகும் என்றும், மேலும் கடந்த இரண்டு வருடங்களாக வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. இந்த வருடமாவது தேவையான அளவு மழை பெய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.

தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், வட மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
English summary-Chennai Meteorological Centre has mentioned North East Monsoon will commence only after a week’s time.