மத்திய ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் ரயில்வே பட்ஜெட் குறித்த முழு விபரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இதற்கென ஒரு தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இணையதளத்தில் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.railbudget2016.indianrailways.gov.in என்ற இணையளத்தில் ரயில்வே பட்ஜெட் குறித்த முழு விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளாலம்.

மேலும் ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டின் போதும் ரயில்வே பட்ஜெட் தொடர்பான விவரங்கள் அனைத்தும் `பிங்க் புக்’ என்ற பெயரில் புத்தக்கங்கள் அச்சடிக்கப்படும். இந்த புத்தகத்தில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மானிய கோரிக்கைகள் குறித்த விவரங்கள் அனைத்தும் இருக்கும். இந்த வருடம் இணையதளத்தில் நேரடியாக ரயில்வே பட்ஜெட்டின் அனைத்து அம்சங்களும் இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் இந்த புத்தகங்களை குறைந்த அளவிலேயே அச்சுப்பதிப்பது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மின்னணு முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 12 லட்சம் ஏ-4 காகிதங்கள் மிச்சமாகியிருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English Summary: Today Railway Budget is going to be presented by Central Railway Minister Suresh Prabhu.