postage24216100 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியம் கொண்ட அஞ்சல் தலைகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக அழிந்து வருவதாக அஞ்சல்துறையினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அஞ்சல்தலைகளின் விற்பனையில் 50% சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் முதன்முதலில் அஞ்சல்தலைகள் கடந்த 1854-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் கடந்த 150 வருடங்களுக்கும் மேல் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த அஞ்சல் தலைகள் செல்போன், இமெயில் போன்ற டெக்னாலஜி வளர்ச்சி காரணமாக கடிதம் எழுதும் வழக்கம் குறைந்துவிட்டதால், அஞ்சல் தலைகளின் விற்பனையும் குறைந்துவிட்டது.

சுதந்திரப் போராட்ட தியாகிகள், தேசிய விலங்குகள், பறவைகள், முக்கிய நிகழ்வுகள், பழம்பெரும் அரசியல் தலைவர்களின் சாதனை போன்றவற்றை நினைவுகூரும் வகையில் புதியதாக பல அஞ்சல் தலைகளை அச்சிட்டு வெளியாகியபோதிலும், அதன் தேவை வெகுவாக குறைந்துள்ளதால் விற்பனையும் குறைத்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், அஞ்சல் தலைகள் விற்பனை 50 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது என, இந்திய அஞ்சல் துறை சமீபத்தில் வெளியிட்ட தகவல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2013-14ஆம் ஆண்டில் ரூ.670.7 கோடிக்கும், 2014-15-இல் ரூ.576.2 கோடிக்கும், 2015-16-இல் நவம்பர் வரை ரூ.345.7 கோடிக்கும் அஞ்சல் தலைகள் விற்பனையாகி உள்ளன. இவற்றை ஒப்பிடும் போது, அஞ்சல் தலை விற்பனை வாயிலாகக் கிடைக்கும் வருவாயானது பாதியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பார்சல் மூலம் கிடைக்கும் வருவாயானது, அக்டோபர் வரை (2015) 117 சதவீதம் உயர்ந்துள்ளது என்று கூறினார்.

English Summary: Technology development in the half of Postage sale.